தேனிலவுக்கு சென்ற கடற்படை அதிகாரி சுட்டுக் கொலை – சடலம் அருகே மனைவி கண்ணீர்

ஹரியாணாவின் கர்னால் பகுதியை சேர்ந்தவர் வினய் நர்வால். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கடற்படையில் பணியில் சேர்ந்தார். கடற்படையில் லெப்டினென்ட் ஆக பணியாற்றி வந்தார்.
கடந்த 16-ம் தேதி வினய் நர்வாலுக்கும் டெல்லி அருகேயுள்ள குருகிராமை சேர்ந்த ஹிமான்ஸிக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு தேனிலவு செல்ல முடிவு செய்தனர். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் விசா கிடைக்கவில்லை.

ஏப்ரல் 16-ம் தேதி திருமணத்தின்போது வினய் நர்வாலும் ஹிமான்ஸியும் எடுத்த புகைப்படம்


இறுதியில் காஷ்மீரின் பெகல்காமுக்கு தேனிலவு செல்ல முடிவு செய்தனர். கடந்த 21-ம் தேதி வினய் நர்வாலும் ஹிமான்ஸியும் பெகல்காம் சென்றனர். அங்குள்ள ஓட்டலில் அரை எடுத்து தங்கினர். அடுத்த நாள் வினய் நர்வாலை தீவிரவாதிகள் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
கணவரின் சடலம் அருகே ஹிமான்ஸி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post Comment

You May Have Missed