காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில்5 தீவிரவாதிகளுக்கு தொடர்பு
காஷ்மீரின் பெகல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது லஷ்கர்-இ தொய்பா தீவிரவாத அமைப்பின் ஓர் பிரிவான டிஆர்எப் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் தமிழ்நாடு, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 27 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் அரசு சார்பில் அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலை 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீரை சேர்ந்த 2 தீவிரவாதிகள் நடத்தியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எம்4 மற்றும் ஏகே47 ரக துப்பாக்கிகள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்களின் உருவப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
பெகல்காம் பகுதி முழுவதும் ராணுவம், துணை ராணுவ படைகள், காஷ்மீர் போலீஸார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினார். அவரது தலைமையில் டெல்லியில் புதன்கிழமை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தப்பியோடிய 5 தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.20 லட்சம்
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பெகல்காம் பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “பெகல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் தப்பிக்க முடியாது. அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
Post Comment